Learn English Through Tamil Pdf Books
Learn English Through Tamil Pdf Books. 3/18/2018 0 Comments Learn arabic in 30days through tamil free book. Learn tamil in 30 days through english free book download. Sura's Learn English Grammar Through Tamil. Sura Books - English language - 184 pages. Get Textbooks on Google Play. Rent and save from the world's largest eBookstore. Read, highlight, and take notes, across web, tablet, and phone.
Subordinating Conjunctions (சார்ந்த இணைப்புச்சொற்கள்) 'சார்ந்த இணைப்புச்சொற்கள்' எப்போதும் பிரதான வாக்கியக் கூற்றையும் (Independent Clause) சார்ந்த வாக்கியக் கூற்றையும் (Dependent Clause) தொடர்புபடுத்தும் வகையில் பயன்படுபவைகள் ஆகும். இவை ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கானவைகள் உள்ளன. • after • although • as long as • as soon as • even though • before • if • how • since • than • that • when • where • whether • while • whenever எடுத்துக்காட்டு வாக்கியங்கள்: If I do a job, I will get experience.
நான் ஒரு வேலை செய் தால் எனக்கு கிடைக்கும் அனுபவம். I will get experience if I do a job. எனக்கு கிடைக்கும் அனுபவம் நான் செய் தால் ஒரு வேலை. Although he is small, he is very strong. அவன் சிறியவனாக இருந்தப்போதிலும், அவன் மிகவும் வலுவானவன்.
I will be able to buy a car when I get older. எனக்கு வாங்க முடியுமாக இருக்கும் ஒரு மகிழுந்து நான் வயதானவனாகும் பொழுது. குறிப்பு: சார்ந்த இணைப்புச்சொற்கள் எப்போதும் சார்ந்த வாக்கிய கூற்றின் (Subordinate Clause) முன்னாலேயே பயன்படும். மேலும் விரிவாக இப்பாடத்தை எதிர்வரும் நாட்களில் பார்ப்போம். Correlative Conjunctions (ஒப்புமை இணைப்புச்சொற்கள்) ஒப்புமை இணைப்புச்சொற்கள் இரண்டு சமனிடையான வாக்கியங்களை ஒப்புமையுடன் இணைக்கும் சொற்களாகும். இவ்விணைப்புச்சொற்கள் சோடிகளாகவே பயன்படும்.
But • not only. But also • either.
Or • neither. Nor • whether.
Or எடுத்துக்காட்டு வாக்கியங்கள்: Neither cats nor dogs are my favorite animals. பூனைகள் நாய்கள் இரண்டுமே எனது விருப்பு மிருகங்கள் அல்ல. Today, it is not only warm but also humid. இன்று சூடாக மட்டுமல்ல ஈரப்பதமாக வும் கூட உள்ளது.
I want both a computer and a iPad. கணனி மற்றும் ஐபேட் இரண்டும் எனக்கு வேண்டும்.
Sarmilan is either playing cricket with his friends or studying. சர்மிலன் இரண்டிலொன்று அவனது நண்பர்களுடன் துடுப்பாட்டம் விளையாடிக்கொண்டிருப்பான் அல்லது படித்துக்கொண்டிருப்பான். மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம். Conjunctive Adverbs ( இணைப்பு வினையெச்சங்கள்) இணைப்பு வினையெச்சங்கள் இரண்டு பிரதான வாக்கியக் கூறுகளை (Main Clauses) இணைப்பவைகளாகவே, அதாவது 'ஒருங்கிணைப்புச் சொற்கள்' போன்றதாகவே பயன்படும்.
ஆனாலும் சற்று வேறுபட்டது. அதாவது தமிழில் 'அதனால்', எப்படியானாலும்', 'இதுதொடர்பாக' போன்ற சொற்களை பயன்படுத்தி இரண்டு வாக்கியங்களை இணைக்கும் முறைக்கு ஒத்ததாகவே இவை இருக்கும்.
• accordingly • consequently • finally • furthermore • however • similarly • therefore எடுத்துக்காட்டு வாக்கியங்கள். I wanted to buy a shirt; however, It was too expensive. எனக்கு ஒரு சட்டை வாங்க வேண்டும்; எனினும், அதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது. David went to market; however, he didn't buy anything. டேவிட் சந்தைக்கு சென்றார்; இருப்பினும், அவர் எதனையும் வாங்கவில்லை.
Sarmilan was tired. Therefore, he immediately took a nap when he got home. சர்மிலன் களைப்பாக இருந்தான். அதனால், அவன் வீட்டிற்கு சென்றடைந்தவுடன் ஒரு சிறுநித்திரை (கொண்டான்) எடுத்தான். குறிப்பு: இனைப்பு வினையெச்சங்கள் என்பவை ஒருவகையில் வினையெச்சங்கள் தான்.
இருப்பினும் அவை வாக்கியக் கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் 'இணைப்பு வினையெச்சங்கள்' என்றழைக்கப்படுகின்றன. மேலும் விரிவாக இப்பாடத்தை விரைவில் பார்ப்போம்.
நாம் வாக்கியங்கள் எவ்வாறு அமைகின்றன, அவற்றை எவ்வாறு அமைத்து பயிற்சிசெய்யவேண்டும் என்பதற்கான எளிதான வழிமுறைகளை வழங்கியிருந்தோம். அப்பாடத்தில் நாம் வழங்கிய வீட்டுப் பயிற்சிகளை முறையாக பயின்ற எவருக்கும் ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று நம்புகின்றோம். புதிதாக தளத்திற்கு வந்தோர் ஒரு முறை பார்த்துக்கொள்ளவும். இன்றையப் பாடம் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கியக் கூறுகளை இணைத்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படும் மிக முக்கியமான ஒன்றாகும்.